இந்தியாவின் ஈரோடு நகரில் அமைந்துள்ள டெக்ஸ்வேலி ஒரு ஒருங்கிணைந்த ஜவுளி கடை ஆகும். இந்த கட்டுமானத்திற்கான அஸ்திவாரம், ஜனவரி 22, 2011 அன்று, மத்திய அமைச்சர் திரு.தயாநிதிமாறன் அவர்களால் அமைக்கப்பட்டது. இந்த ஜவுளி மாலில் தினசரி சந்தை கடைகள் மற்றும் வாராந்திர சந்தை கடைகள் உள்ளன. இது சர்வதேச தரநிலை உடன் அமைந்த பிரத்யேக துணி சந்தை சந்தை மையமாகும், தற்போது ஈரோடு நகர எல்லைக்குள் தற்போது ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத சந்தைகளில் இருந்து ஒருங்கிணைந்த வளாகத்தில் ஜவுளி சந்தை அமைய வேண்டும் என்ற ஜவுளி உற்பத்தியாளர்களால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும். இந்த ஜவுளி வளாக சந்தை சேலம் கோவை நான்கு வழி சாலையில் சித்தோடு அருகில் நான்கு வழி சாலையில் பிரதான வழியில் அமைந்துள்ளது.
ஈரோடு ஜவுளி சந்தை இந்திய அளவில் பிரபலமான ஒன்றாகும். இங்கே செவ்வாய் , புதன், மற்றும் வியாழக்கிழமை களில் நடைபெறும் திறந்த வெளி மொத்த ஜவுளி கடைகளுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் தங்களுக்கு தேவையான ஜவுளிகளை கொள்முதல் செய்வார்கள். இங்கே பன்னிர்செல்வம் பார்க், லக்காபுரம், சென்ரல் தியேட்டர் வளாக சந்தைகள் பிரதானமாகும். ஈரோடு நகரம் இந்திய அளவில் பிரதானமாக இருப்பதற்கு இந்நகரம் திருப்பூர், கரூர், கோவை மற்றும் சேலம் நகரங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளதால் உற்பத்தியாளர்களுக்கு சுலபமான பொருட்களை கொண்டு செல்ல ஈரோடு நகரம் மையமாக உள்ளது. இங்கே உள்ள ரயில் நிலையம் இந்திய அளவில் பொருட்களை கொண்டு செல்ல சுலபமாக அமைந்துள்ளது. ஈரோடு நகரை பொறுத்தவரை கைத்தறி பொருட்கள் உற்பத்தியில் பிரபலமான நகரம். அருகில் இருக்கும் திருப்பூரில் பின்னலா தயாரிப்பு சர்வதேச அளவில் பிரபலமான நகரம். கோவை பவர்லூம் ரகங்கள் மற்றும் சேலம் நகரம் கைத்தறி மற்றும் பவர்லூம் பொருட்களுக்கு பிரபலமான நகரங்கள் ஆகும். ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு விற்பனை மிகப்பெரிய சவால். இதனால் இந்திய அளவில் அனைத்து வகையான வியாபாரிகள் பயன் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் ஏற்படுத்தி உற்பத்தி யாளர்கள் பயன் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஜவுளி வளாகம் டெக்ஸ்வேலி நிறுவனம் அமைக்கப்பட்டது. இந்த வாராந்திர சந்தை உற்பத்தி யாளரே நேரடியாக வணிக பெருமை கொண்டு வளர்கிறது
இந்த பரந்த 3.75 லட்சம் சதுர அடி. இப்பகுதியில் வாராந்திர வர்த்தகர்கள் முற்றிலும் கட்டப்பட்டிருக்கிறது
கடின உழைப்புக்கான ஒரு உன்னத அனுபவம், இந்த உலக வர்க்க சந்தை இடம் ஈரோடுஅளவிலும், சுற்றுப்புறத்திலும் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் சமூகத்தின் வியாபார நோக்கங்களுக்கு உதவுகிறது.